நடிகையும், ஸ்ரீதேவி விஜயகுமாரின் செல்ல மகள் ரூபிக்காவின் 7-ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பழம்பெரும் நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதிகளின் மகளான ஸ்ரீதேவி திருமணத்திற்கு முன்பு திரையுலகில் ஹீரோயினாக நடித்திருந்தாலும், திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து முழுமையாக விலகி குழந்தை, குடும்பம், கணவர் என செட்டில் ஆகி விட்டார்.
ஸ்ரீதேவி கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்கிற தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு 2016 ஆம் ஆண்டு ரூபிக்கா என்கிற மகள் பிறந்தார். இந்நிலையில் தன்னுடைய மகள் ரூபிக்காவின் 7-ஆவது பிறந்தநாள் புகைப்படங்களை இவர் வெளியிட, உங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா? என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.