இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட், ஆஹா உள்ளிட்ட ஓடிடி தளங்கள் பிரபலமாக இருக்கின்றன. இவற்றில் நெட்ஃப்ளிக்ஸில் உலகின் பல்வேறு நாடுகளில் உருவாகும் வெப் சீரிஸ்கள் முதல் படங்கள்வரை ஸ்ட்ரீமிங் ஆகிக்கொண்டிருக்கின்றன. இதனால் அந்த தளத்துக்கு பயனர்கள் அதிகளவில் இருக்கின்றனர்.
அதிக பணம் கொடுத்து நெட்ஃப்ளிக்ஸை சப்ஸ்க்ரிப்ஷன் செய்ய வேண்டுமா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அதன் காரணமாக ஒருவர் மட்டும் சப்ஸ்க்ரைப் செய்து பாஸ்வேர்டை மற்றொருவருக்கு கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.
சப்ஸ்க்ரைபர்கள் தொடர்ந்து இப்படி செய்வதால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு வருமானம் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதனை தற்போது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தடுத்திருக்கிறது. அதன்படி, ஒரு பயனர் மற்றொருவருக்கு பாஸ்வேர்ட் ஷேர் செய்யப்படுவது நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “பாஸ்வேர்டை ஷேர் செய்திருக்கும் பயனர்களுக்கு இதுதொடர்பாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.