அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் முதல் திரைப்படம் ‘தீயவர் குலைகள் நடுங்க’. இதில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, வேல.ராமமூர்த்தி, தங்கதுரை , ஒ.ஏ.கே.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கி இருக்கிறது.