அடுத்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு டபுள் விருந்து காத்திருந்தது. ஆம், சந்திரமுகி 2 மற்றும் மார்க் ஆண்டனி என பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் இரு திரைப்படங்களும் செப்டம்பர் 15 வெளியாவதாக இருந்தது.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படம் தான் செப்டம்பர் 15ஆம் தேதி ரேஸில் இருந்து விலகியுள்ளது.
சந்திரமுகி படத்தின் வெற்றியை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி 2 அடுத்த வாரம் திரையரங்கில் வெளியாவதாக இருந்த நிலையில் தற்போது VFX வேலைகள் முடியாத காரணத்தினால் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதிக்கு தள்ளிப்போகிறது.