இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் நாக சைத்தன்யா ???

by vignesh

நடிகர் நாகசைத்தன்யா மற்றும் சமந்தா இருவரும் 5 ஆண்டுகள் காதலித்து கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளிலேயே கசந்த நிலையில் இருவரும் கூட்டாக தங்களது விவாகரத்து முடிவை வெளியிட்டனர்.

நாகசைத்தன்யா வீட்டில் பெண் பார்க்கப்பட்டுள்ளதாகவும் பெரிய தொழிலதிபரின் மகளை நாக சைத்தன்யா மணக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக நாகர்ஜூனா குடும்பத்தினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தாவை பிரிந்தபின்பு பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கிவந்த நாக சைத்தன்யா, தற்போது வீட்டில் பார்த்துள்ள பெண்ணை மணக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தா நாக சைத்தன்யாவுடனான பிரிவிற்கு பிறகு அடுத்தடுத்த படங்கள், வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்திருந்த குஷி படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப் படமாகியுள்ளது.

 

You may also like

Leave a Comment