லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியானது கைதி. இந்தப் படத்தில் மிரட்டலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார் நடிகர் கார்த்தி.
முன்னதாக கைதி மற்றும் விக்ரம் படங்களுக்கு ரசிகர்களிடையே கிடைத்த ஏகோபித்த வரவேற்பை தொடர்ந்து இந்தப் படங்களின் அடுத்த பாகங்கள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இதில் முதலில் கைதி 2 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் லியோ படத்தை தொடர்ந்து கைதி 2 படத்தின் இயக்கத்தை லோகேஷ் மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அடுத்ததாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தின் சூட்டிங்கை துவங்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனால் கைதி 2 படத்தின் அப்டேட் தெரியாமல் கார்த்தியின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில் கைதி 2 படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக நடிகர் கார்த்தி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். முன்னதாகவே இந்தப் படத்திற்காக திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் சூட்டிங் எப்போது துவங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறியுள்ளார்.
அடுத்ததாக கார்த்தியின் ஜப்பான படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளது. கைதி 2 படம் கண்டிப்பாக உருவாகும் என்று கார்த்தி மீண்டும் உறுதியுடன் கூறியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.