மதுரையில் என்எச்44 நெடுஞ்சாலையில் தொடர்ச்சியாக விபத்துகள் நடக்கின்றன. திட்டமிட்டு நடத்தப்படும் இந்த விபத்துகளின் பின்னால் இருப்பது யார் என்ற விசாரணையில் இறங்குகிறார் த்ரிஷா. த்ரில்லர் படத்துக்கே உண்டான தீவிரத்தன்மை படம் முழுவதும் இருக்கும் என்பதை ட்ரெய்லரிலேயே தெரிந்து கொள்ளமுடிகிறது. அதற்கான மூட்-ஐ சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை கச்சிதமாக கடத்துகிறது.
மேக்கம் இல்லாத முகத்துடன் ஒருவித சீரியஸ்தன்மையுடன் வருகிறார் த்ரிஷா. நாயகியை மையப்படுத்தி வெளியான அவரது முந்தைய படங்களின் சறுக்கல்களை ‘தி ரோட்’ சரிசெய்யும் என்று நம்புவோம்.