சதீஷ், சுரேஷ் ரவி நடிக்கும் படம், ‘முஸ்தபா முஸ்தபா’. தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் பிரவீன் சரவணன் கூறும்போது, “ஒரு நண்பர்கள் குழு, சிக்கல் ஒன்றில் மாட்டிக்கொள்கிறது. அதில் இருந்து அவர்கள் ஒவ்வொருவரும் உதவி செய்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது கதை.
சீரியஸான கதைதான், அதை ஜாலியாக சொல்கிறோம். நட்பைக் குறிப்பதால் ‘முஸ்தபா முஸ்தபா’ என்று தலைப்பு வைத்துள்ளோம். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன” என்றார்.