நடிகை சுவாதி கணவரை பிரிந்துவிட்டதாக இணையத்தில் தகவல் பரவி வரும் நிலையில், மேடையில் நடிகரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரியாகி இருக்கும் சுவாதி, மந்த் ஆஃப் மது என்கிற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் நாகோடி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில், நவீன் சந்திரா, ஸ்வாதி, ஸ்ரேயா நவிலே ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய சாய் தரம் தேஜ், கல்லூரி நாட்களில் இருந்தே ஸ்வாதி என் சிறந்த தோழி. இந்தப் படம் சுவாதிக்கு நல்ல வெற்றியைக் கொடுக்க வேண்டும். ஆல் தி பெஸ்ட் ஸ்வாதி என்றார். இதை கேட்டுக்கொண்டிருந்த ஸ்வாதி அவரை கட்டிப்பிடித்து மேடையிலேயே முத்தம் கொடுத்தார். சுவாதியின் இந்த செயல் மேடையில் இருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. ஏற்கனவே விவாகரத்து தொடர்பான சர்ச்சை இருக்கும் நிலையில், பொது இடத்தில் நடிகருக்கு முத்தம் கொடுத்து நடிகை சுவாதி மீண்டும் பேசுபொருளாகி உள்ளார்.