விஜய்யின் லியோ படத்தின் பயங்கர புரமோஷனாக ஆடியோ வெளியீட்டு விழா அமையும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மதுரை, கோவை என தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப் போவதாகவும் மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடத்தப் போவதாகவும் லியோ படக்குழு திட்டமிட்டதாக ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகின.
கடைசியில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த லியோ ஆடியோ வெளியீட்டு விழாவே ரத்தாகி விட்ட நிலையில், கண்டிப்பாக செப்டம்பர் 30ம் தேதி மீண்டும் விஜய் ரசிகர்கள் விரக்தியின் உச்சத்திற்கே சென்று விடுவார்கள் என்பதால், அவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்த லியோ படத்தின் டீசரை வெளியிடுங்க என்கிற உத்தரவை அதிரடியாக தளபதி போட்டு இருப்பதாகவும் அதற்கான பணிகளை லியோ படக்குழு ஆரம்பித்து இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.