ஞானவேல் இயக்கவுள்ள தனது 170வது படம் நல்ல கருத்துள்ள பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “படப்பிடிப்பில் கலந்துகொள்ளச் செல்கிறேன். படத்துக்கு தலைப்பு இன்னும் வைக்கவில்லை. ’ஜெயிலர்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. என்னுடைய 170-வது படம் நல்ல கருத்துள்ள, பிரம்மாண்டமான ஒரு பொழுதுபோக்கு திரைப்படம். இதனை ஞானவேல் இயக்குகிறார்” இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.