விஜயகாந்திற்கு இறுதி மரியாதை செலுத்திய போது நடிகர் ராகவா லாரன்ஸ் அவரது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கத் தயார் என்று தெரிவித்திருந்தார். சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ள ராகவா லாரன்ஸ் 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் அன்பு இயக்கி வருகிறார்.
தற்போது ராகவா லாரன்சின் கேரக்டரை இணைக்கும் பொருட்டு படத்தின் ஸ்கிரிப்டில் மாற்றங்களை இயக்குநர் அன்பு மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
சண்முக பாண்டியன் -ராகவா லாரன்ஸ் கூட்டணி எப்படிப்பட்ட வரவேற்பை கொடுக்கும் என்று பொருத்திருந்து பார்க்கலாம்