ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் கடந்த 9 -ம் தேதி வெளியானது. இந்த படத்தில் முக்கியமான ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
லைகா தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படம் அதிக அளவில் வசூல் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் அதற்கு ஆப்பு அடித்தது போல வசூல் நிலவரம் இருப்பதை பார்த்து அப்செட் ஆகி விட்டதாம் தயாரிப்பு நிறுவனம். எதிர்பார்த்ததை விட அதிகளவுக்கு பிசினஸ் சரிந்து விட்டதாம். அதைவிட ரஜினியை வைத்து அடுத்து உருவாக்கி வரும் படத்திற்கும் இதன் மூலம் விநியோகஸ்தர்கள் பின் வாங்கவும் விலையை குறைத்து பேசவும் முடிவு செய்தது தயாரிப்பு நிறுவனத்துக்கு தலைவலியை கொடுத்து விட்டதாக கூறுகின்றனர்.