நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண். அஜித், விஜயகாந்த், கமல் என்று நிறைய முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்தார்.
இந்த நிலையில் நடிகை கிரண் ஷகிலாவோடு ஒரு பேட்டியில் கலந்துகொண்டிருக்கிறார். அதில் திருமணம் பற்றி பேசும்போது, என்னுடைய வேலை, கெரியர் எல்லாம் முடிந்த பிறகு இந்த வருடம் திருமணம் செய்து கொள்வேன். நான் ஒரு நபரை காதலித்தேன், அவருக்காக தான் சினிமாவை விட்டு வந்தேன்.
ஆனால் என்னை ஏமாற்றிவிட்டார், அதோடு அவர் என்னை அடித்துவிட்டார். அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதனால் அவரை ஒரு முறை வீட்டிற்கு வரவைத்து நானும் அடித்து ஆடைகளை அவிழ்த்து ரோட்டில் ஓட விட்டேன் என்று கிரண் பேசி இருக்கிறார்.