‘கே.ஜி.எஃப்’ படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர், கன்னட நடிகர் யாஷ். இவர், அடுத்து நடிக்கும் படத்தை நடிகை கீது மோகன் தாஸ் இயக்குகிறார். யாஷின் 19 -வது படமான இதில், இந்தி நடிகை கரீனா கபூர் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் ரசிகர்களுடன் உரையாடிய கரீனா கபூர், “முதன்முறையாக, மிகப்பெரிய தென்னிந்திய படம் ஒன்றில் நடிக்கிறேன். இதை என் ரசிகர்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியுள்ளார்.