ராஜமவுலி இயக்கிய படம், ‘ஆர்ஆர்ஆர்’. இந்தப் படத்தின் சிறப்பு திரையிடல் ஜப்பானில் நேற்று முன் தினம் நடந்தது. இதற்காக இயக்குநர் ராஜமவுலி தனது மனைவியுடன் அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் 83 வயது ரசிகை ஒருவர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து ராஜமவுலிக்கு சிறப்புப் பரிசு ஒன்றை அளித்துள்ளார்.
இதை தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள ராஜமவுலி, “ஆர்ஆர்ஆர் படம் பார்த்து மகிழ்ச்சி அடைந்த 83 வயது ரசிகை, வண்ணத்தாள்களில் செய்யப்பட்ட ஆயிரம் ஓரிகாமி கொக்குகளை பரிசளித்து எங்களை ஆசிர்வதித்தார் என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.