‘எம்புரான்’ படப்பிடிப்பு அக்டோபர் 5-ல் தொடக்கம்!!!

by vignesh

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5-ம் தேதி தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான அறிவிப்பு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’.  இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என பிருத்விராஜ் அறிவித்திருந்தார்.

அதன்படி இரண்டாம் பாகத்துக்கு ‘எம்புரான்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ளது .

 

You may also like

Leave a Comment