நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் இருவரும் காதலித்து கடந்த 2001ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். திருமணம் முடிந்த நிலையிலும் இருவரும் தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றனர். நடிப்பில் மட்டுமில்லாமல் சீரியல் தயாரிப்பிலும் ராதிகா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதேபோல சரத்குமாரும் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் இவரது வாரிசு, போர் தொழில் படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தன. வசூலிலும் சிறப்பாக அமைந்தன. சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் கடந்த 23 ஆண்டுகளாக மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்துவருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் தங்களது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இதையொட்டி அவர்ளுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். இதனிடையே தங்களது 23 ஆண்டு திருமண பந்தத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு காலகட்டங்களில் தாங்கள் ஒன்றாக இருந்த புகைப்படங்களை ஒருங்கிணைத்து இன்ஸ்டாகிராமில் ராதிகா வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram