இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும் அதன் காரணமாகத்தான் சமந்தாவை நாக சைதன்யா பிரிந்தார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன.
மேலும், தனது தந்தையை போலவே நாக சைதன்யாவும் இரண்டாவது திருமணம் செய்ய போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில், அடுத்த அதிர்ச்சி தகவல்கள் தற்போது டோலிவுட்டையே பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.
நாக சைதன்யா – சோபிதா பிரேக்கப்: நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபாலாவும் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இருவரும் பிரேக்கப் செய்து விட்டு பிரிந்து விட்டதாகவும், சமீப காலமாக இருவரையும் ஒன்றாக பார்க்க முடியவில்லை என்றும் இருவரும் பேசிக் கொள்வது கூட இல்லை என தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை இதுதொடர்பாக இருவரும் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.