சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகவுள்ள டி50 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் தனுஷ் நடிக்கவுள்ளார். படத்தில் அபர்ணா முரளி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்குப்பட இயக்குநர் சேகர் கம்மூலா படத்திலும் தனுஷ் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.