அஜித் தற்போது தனது 62வது படமான விடாமுயற்சியில் கமிட்டாகியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.
விடாமுயற்சி அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இறுதியாக துபாய், ஓமன் நாடுகளில் பைக் டூர் சென்றிருந்த அஜித், தற்போது அங்கேயே விடாமுயற்சி படத்திற்காக ரெடியாகிவிட்டாராம். அதாவது விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட ஷூட்டிங், துபாயில் தொடங்கவுள்ளது.
அதற்கு ரெடியாகிவிட்ட அஜித், தனது கெட்டப், லுக் ஆகியவற்றை முழுமையாக மாற்றிவிட்டார். வழக்கம்போல சால்ட் & பெப்பர் ஹேர் ஸ்டைல் என்றாலும், அதிலும் சில வித்தியாசங்கள் இருப்பது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.