சந்தானம் படங்கள் என்றாலே நகைச்சுவை அதிகமிருக்கும் என்றெண்ணிய காலம் உண்டு. ஆனால், அவர் எப்போது ஹீரோவாக மாறினாரோ அப்போதே அந்த நகைச்சுவை காணாமல் போய்விட்டது.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஏ1, தில்லுக்கு துட்டு 1 படங்கள் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. ஆனால், அதன்பின் வந்த பிஸ்கோத்து, குளு குளு, ஏஜென்ட் கண்ணாயிரம், டிக்கிலோனா போன்ற படங்களில் சந்தானத்தின் ஸ்பெஷல் காமெடி மிஸ்ஸானதால் ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியில் இருந்தனர். ஹீரோவா நீங்க நடிச்சது போதும் என்று வெளிப்படையாகவே பேசத் தொடங்கினர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதையடுத்து சனிக்கிழமை 3 கோடி வசூலான நிலையில், மூன்றாம் நாளான நேற்று 3.40 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் மூன்று நாட்களில் டிடி ரிட்டர்ன்ஸ் படம் 8 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருப்பதால் இனிவரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.