நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுத் தந்து வருகிறது.
சமீபத்தில் அவரது பத்து தல படம் வெளியாகி சிறப்பாக அமைந்தது . அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிம்பு கமிட்டாகியுள்ளார். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.
STR48 படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியுடன் சிம்பு இணைந்துள்ள அந்த புகைப்படத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்லிம்மாக இருந்தது போல இல்லாமல் குண்டாக காணப்படுகிறார். இதனால் சிம்பு மீண்டும் குண்டாகிவிட்டார் என்றே கூறப்படுகிறது. தன்னுடைய படங்களுக்காக மெனக்கெடும் நடிகர்களில் சிம்புவும் ஒருவர் என்பதால் படத்திற்காக மீண்டும் உடல் எடையை அவர் ஏற்றியுள்ளாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.