இலங்கை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் பாடகர் ஹிரிஹரனின் இசை நிகழ்ச்சிக்கும், நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று முன்தினம் நடைபெற்றது இருந்தது. இந்த நிகழ்ச்சியின் முழு ஏற்பாட்டையும் ரம்பா மற்றும் அவரது கணவர் பார்த்துக்கொண்டனர், முதலில் இது இலவசம் என அறிவித்திருந்தனர். ஆனால், அதன் பிறகு இந்த நிகழ்ச்சியை பணமாக்குவதற்காக ரூ 25 ஆயிரம் ரூபாய், ஏழு ஆயிரம் ரூபாய், மூன்றாயிரம் ரூபாய் என டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
இசை நிகழ்ச்சியில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்பா, யோகி பாபு உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். 35,000 பார்வையாளர்கள் தான் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிக்கெட்டை அதிகமானோருக்கு விற்று விற்றதால் கிட்டத்தட்ட 1,10,000 பேர் கலந்து கொண்டனர்.
கட்டுக் அடங்காத கூட்டத்தால் பலர் மயங்கி விழ, மேலும் தள்ளு முள்ளு ஏற்பட்டு அடி தடி வரை போக என்ன செய்வது என்று தெரியாமல் நிகழ்ச்சியினை அவ்வப் போது நிறுத்தி நிறுத்தி நிகழ்ச்சியினை ஒரு வழியாக முடித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் எப்படியும் 10 கோடி முதல் 20 கோடி வரை வசூல் செய்த ரம்பா சீக்கிரம் கனடா செல்ல உள்ளார், இந்த நாடு இருக்க நிலையில இசை நிகழ்ச்சி தேவையா என இலங்கை மக்கள் வசை பாடி வருகின்றனர்.