நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்குமார் இப்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.