அஜித்தின் 62வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். மே மாதம் அஜித் பிறந்தநாளில் விடாமுயற்சி படம் குறித்து அபிஸியலாக அறிவிக்கப்பட்டது.
அஜித்தின் பிறந்தநாள் தினமான மே 1ம் தேதி விடாமுயற்சி டைட்டில் அறிவிக்கப்பட்டது. இதனால் உடனடியாக படப்பிடிப்பும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஜித் தொடர்ச்சியாக பைக் டூர் சென்றுகொண்ட இருப்பதால் இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. அதேநேரம் விடாமுயற்சி படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்து வருவதால் தான் படப்பிடிப்பு தாமதமாகிறது என சொல்லப்பட்டது.
இன்னொருபக்கம் அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அப்டேட் குறித்து கேட்டு வந்தனர். ஆனாலும், லைகா தரப்பில் இருந்து இதுவரை எந்த அபிஸியல் அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஆகஸ்ட் இறுதியில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கிவிடும் என சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதேபோல், இன்று விடாமுயற்சி படத்திற்கு பூஜை போடப்படுவதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், விடாமுயற்சி பூஜை கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணங்கள் என்னவென்று இதுவரை தெரியவரவில்லை. இதனையறிந்த அஜித் ரசிகர்கள் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர். இதனையடுத்து அஜித் ரசிகர்களின் டிவிட்டர் ரியக்ஷன்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.