ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்கும் படம் ‘அனிமல்’. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் டிசம்பர் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
டீசரின் முதல் காட்சியிலேயே படம் அப்பா – மகன் உறவைப் பற்றியது என்பதை உணரமுடிகிறது. அதேசமயம், ‘புள்ளைய எப்டி வளக்குறதுன்னே எனக்கு தெரியல’ அனில் கபூர் கூற, ‘நல்லா வளத்துருக்கீங்க அப்பா’ என்கிறார் ரன்பீர். இதன் மூலம் படம் தந்தை – மகனுக்கும் இடையிலான சிக்கலான விஷயங்களை பேசுவதுடன் வன்முறையையும் கையிலெடுக்கிறது.
ரன்பீர் ஒருகட்டத்தில் தாடி வளர்த்து, ஹாம்ஸ் தெரியும்படி ‘பீஸ்ட்’ மோடுக்கு மாறுகிறார். தந்தைக்காக ஒருவரை பழிவாங்க ‘அனிமல்’ஆக மாறுவதாக கணிக்க முடிகிறது. பிரமாண்டமான முறையில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் படம் உருவாகியிருப்பதை டீசர் உணர்த்துகிறது.