பத்திரிக்கையாளர், நடிகர் என்ற முகங்கள் இருந்தாலும் பயில்வானை பொருத்தவரை யூடியூப் தான் அவரை இப்போது வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இதை அவரே பலமுறை சொல்லி இருக்கிறார். அந்த அளவுக்கு இவர் திரை பிரபலங்கள் பற்றி நாம் அறியாத பல விஷயங்களை தைரியமாக சொல்லி வருகிறார். சில நேரங்களில் அவர் சொல்லுவது உண்மையா? பொய்யா? என தெரியவில்லை, பல நடிகர்களை வம்புக்கிழுத்து வாங்கிக் கட்டிக்கொண்டும் இருக்கிறார்.
தற்போது அவர் வம்புக்கிழுத்த நடிகர் யார் தெரியுமா நடிகர், காமெடியன், குணசித்திரம் என பன்முக திறமை கொண்ட நடிகர் ஆனந்தராஜ். உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமானால் பாஷா படத்தில் ரஜினியை கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பாரே அதே நடிகர் தான் ஆனந்தராஜ்.
தற்போது பயில்வான் ஆனத்தராஜை பற்றிய ஒரு ரகசியத்தை கசிய விட்டு இருக்கிறார் அதில் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே ஆனந்தராஜ் தலையில் முடி கிடையாதாம். விக் வைத்து தான் நடித்துக் கொண்டிருக்கிறாராம். வருட கணக்கில் பார்த்து வருவதால் ரசிகர்களுக்கும் இந்த முகமே பழகிவிட்டது என பயில்வான் கூறி இருக்கிறார்.