‘லியோ’ உடன் மோதும் ‘பகவந்த் கேசரி’

by vignesh

அனில் ரவிபுடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் வரும் அக்.19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

இதே தேதியில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படமும் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

You may also like

Leave a Comment