பிக் பாஸ் 7ல் அப்பாஸ் இருக்காரா????

by vignesh

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள நிலையில், நாளை அதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறுகின்றனர்.

விஜய் டிவி போட்டியாளர்கள் தான் அதிகமாக இடம்பெறப் போவதாக கூறுகின்றனர். தர்ஷா குப்தா, விசித்ரா, வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, ரவீனா, விஷ்ணு, சத்யா, குமரன், பப்லு பிரித்விராஜ் என எதுவுமே பெரிதாக தேறாத போட்டியாளர்கள் லிஸ்டே இந்த முறை இடம்பெற்றுள்ளது என ரசிகர்கள் ஃபீல் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த நடிகர் அப்பாஸ் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், கடைசியாக கசிந்த தகவலின் படி அப்பாஸும் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்க போவதில்லை என்றே உறுதியாக கூறுகின்றனர். எதுவாக இருந்தாலும், நாளை ஷூட்டிங் முடிந்ததுமே உறுதியான போட்டியாளர்கள் பட்டியல் கசிந்து விடும் என்பது தெரிந்த விஷயம் தான். காத்திருப்போம் பிக் பாஸ்!!

 

You may also like

Leave a Comment