ப்ளூ ஸ்டார் படம் எப்படி இருக்கு? சினிமாலை ரிவ்யூ…

by vignesh

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கதாநாயகியாக கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் குறித்து பார்க்கலாம்.

படத்தின் ஒன்லைன் கதை என்று பார்த்தால் கிரிக்கெட்டில் உள்ளூரில் இருந்து உலக அளவில் எவ்வாறு பாலிடிக்ஸ் நடக்கிறது என்பதை படம் முழுக்க காட்டி இருக்கிறார்கள்.

அரக்கோணம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இரு கிரிக்கெட் கிளப்புகள் இருக்கிறது. ஆல்பா டீம், ப்ளூ ஸ்டார் டீம் இரு அணிகளுக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டில் பகை ஏற்படுகிறது. ஆல்பா டீம்மின் கேப்டனாக சாந்தனுவும், ப்ளூ ஸ்டார் கேப்டான அசோக் செல்வனும் நடித்து இருக்கிறார்கள். இரு அணிகளுக்கும் முட்டலும், மோதலும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.  ஒரு கட்டத்தில் யார் பெரிசு  என்பதை பார்ப்பதற்காக பல ஆண்டுகாலமாக நடைபெறாத கிரிக்கெட் போட்டி மீண்டும் நடைபெறுகிறது, இதில் சாந்தனு அணி வெளியூரில் கிளப்புகளில் விளையாடும் ஆட்களை கொண்டு வந்து அவரது டீமை வெற்றி பெற வைக்கிறார்.

ஒரு கட்டத்தில் கிளப்பில் விளையாடும் வீரர்களை பார்க்க வரும் சாந்தனுவிற்கும் அங்கு உள்ள கோச்க்கும் கைகலப்பு ஆகிறது, இதை பார்த்த அசோக் செல்வன் சாந்தனுவிற்காக சண்டை போடுகிறார். நாளடைவில் இருவரும் நட்பாகிறார்கள். இதைப் பார்த்து கோச் ஆக வரும் ராகவ் இரு அணிகளும் ஒன்று சேர்ந்து விளையாடச் சொல்கிறார். ஒரே அணியாக இணைந்து கிளப் நடத்தும் போட்டியில் பங்கு பெற்று கடைசியில் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பது மீதமுள்ள கதை.

படத்தின் டைரக்டர் பா. ரஞ்சித்தின் உதவியாளராக பணியாற்றியவர் போல ஆங்காங்கே அட்டக் கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களின் வாசம் வருகிறது, கீர்த்தி பாண்டியனுக்கு பெரிதாக ஏதும் ரோல் இல்லை. இரண்டு, மூன்று காட்சிக்கு வந்து பிறகு காணாமல் போகிறார்.  கோச்சாக வரும் ராகவ் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார் , நடிகர் பாண்டியராஜன் மகன் பிரித்திவிராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெள்ளித் திரைக்கு வந்தாலும் அவர் வரும் காட்சிகள் கிளாப்ஸ் வாங்குகிறது.

படம் முழுக்க கிரிக்கெட்டையே டைரக்டர் காட்டி இருக்குகிறார். ஸ்கிரீன் பிளே சரியான ஸ்லோ, பின்னணி இசை பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை, ஏற்கனவே நிறைய கிரிக்கெட் படங்கள் இதே போன்று  வந்ததால் இந்தப் படம் அவ்வளவாக எடுபடவில்லை மொத்தத்தில் புளூ ஸ்டார் சுமார்.

 

You may also like

Leave a Comment