பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கருக்கு திருமணமான ஏழே மாதத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளதால், நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
நடிகர் தனுஷ் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த ராஞ்சனா என்ற படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து பாராட்டை பெற்றார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு பிலிம் பேர் விருது கிடைத்தது. இவர் ஃபஹத் அகமதுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிலையில், தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கடந்த மே மாதம் புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தார். இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது .
எங்களுக்கு பெண் குழந்தை ராபியா 23 செப்டம்பர் 2023 அன்று பிறந்தார் என பதிவிட்டிருந்தார். ஆனால் சில நெட்டிசன்களோ திருமணமாகி ஏழு மாதங்கள் கூட ஆகவில்லை அதுக்குள்ள குழந்தையா என்றும், அப்போது திருமணத்திற்கு முன்னே கர்ப்பமாக இருந்தீங்களா என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.