நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு என முன்னணி நடிகர்கள் நடிக்க கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது சந்திரமுகி. நடிகர் ரஜினிக்கு மட்டுமில்லாமல் படத்தின் நடிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் சிறப்பாக கைக்கொடுத்தது. படம் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட்டாக அமைந்தது. இந்தப் படத்தில் சந்திரமுகியாக ஜோதிகா மிரட்டிய நிலையில் துர்காவாக ரசிகர்களை கூல் செய்தார் நயன்தாரா.
இந்நிலையில் இன்றைய தினம் இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை லைகா நிறுவனம் தனது வலைதளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தில் ரா ரா சரசக்கு ராரா என்று ஜோதிகா ஆடியதை போலவே இந்த பாகத்திலும் பாடல் ஒன்று ரசிகர்களை மயக்கும்வகையில் அமைந்துள்ளது.
ஆஸ்கர் நாயகன் கீரவாணியின் இசையமைப்பில் இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தன்னுடைய பேட்டியொன்றில் சந்திரமுகி 2, தூக்கமில்லாத பல இரவுகளை கொடுத்துள்ளதாக கீரவாணி தெரிவித்திருந்தார். அந்த அளவிற்கு இந்தப் படத்தில் தன்னுடைய உழைப்பை கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது சுவாகத்தாஞ்சலி என்ற பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது.