இளையராஜாவின் இசை இருந்தால்போதும் தங்களுடைய படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்ற எண்ணமே அப்போதைய இயக்குநர்களுக்கு இருந்தது.இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா.
என்னதான் இளையராஜாவை ஆஹா ஓஹோனு புகழ்ந்தாலும் அவர் யாரையும் மதிப்பதே இல்லை; தான் மட்டுமே இசையமைப்பாளர் என்ற மிகப்பெரிய கர்வத்தில் இருக்கிறார் என்றும் பலர் கூறுவார்கள்.
இந்நிலையில் தினந்தோறும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நாகராஜ் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இளையராஜா குறித்து பேசியிருக்கிறார். அதில் பேசிய அவர், “ஆகாயம் என்ற படத்தை நான் இயக்குவதாக இருந்தது. அதற்கு இளையராஜாவை இசையமைக்க முடிவு செய்தோம். அவரிடம் சென்று ஒரு இடத்தில் கதையை கூறினேன். நான் கதை சொல்லும்போது எந்த இடையூறும் இல்லாமல் முழுமையாகவும் கவனமாகவும் கேட்டார்.
கதையை கேட்டு முடித்ததும் 4 ட்யூன்களை அந்த இடத்தில் வைத்தே போட்டார். நான் பிடிக்கவில்லை என்று சொன்னேன். உடனே அவர் என்னிடம், உனக்கு இதில் என்ன பிடிக்கவில்லை என்று கேட்டார். நான் உடனே, சார் எனக்கு காதலுக்கு மரியாதை படத்தில் இடம்பெற்ற உங்களுடைய பாட்டான என்னை தாலாட்ட வருவாளா மாதிரியான ஸ்டைலில் வேண்டும் என்று கேட்டேன்.
உடனே அவர் நான் போட்ட பாடலை திரும்ப காப்பி அடிக்கச் சொல்லுகிறாயா என கோபித்துக் கொண்டு போய் விட்டாராம், பிறகு வேறு சில ட்யூன்களை போட்டுத் தர எதுக்குட வம்பு என வாந்தவரை லாபம் என கொடுத்த ட்யூன்களை வாங்கிக் கொண்டு ஓடி வந்து விட்டாராம். பின்னே இசைஞானினா சும்மாவா….