பிரம்மாண்டங்களின் இயக்குநர் என்று பெயரெடுத்துள்ள இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்களை இயக்கி வருகிறார்.
கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 2 என இரு படங்களின் சூட்டிங்கையும் ஒரே நேரத்தில் ஷங்கர் இயக்கி வருகிறார். இரண்டு படங்களின் சூட்டிங்கும் ஏறக்குறைய நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே தில் ராஜூ உள்ளிட்டவர்கள் தயாரிப்பில் உருவாகிவரும் கேம் சேஞ்சர் படமும் தெலுங்குப்பட உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தயுள்ளது. தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பின்னணி பாடல்கள் மற்றும் பிஜிஎம் சிறப்பாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்தப் படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்தப் பாடல்கள் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பாடல்களை சூட் செய்வதற்காக மொத்தம் 91 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பு தரப்பு திகைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை இந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூல் துவங்கப்பட்ட நிலையில், வரும் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஷெட்யூலை அடுத்து மீண்டும் அடுத்த ஷெட்யூலில் 40 நாட்கள் தொடர்ந்து சூட்டிங் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் வரும் நவம்பர் மாதத்தில் நிறைவடைந்து அடுத்ததாக போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதனால் படத் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.