சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து.
அத்தோடு கண்ணும் கண்ணும், புலிவால் மிகப்பெரிய வெற்றிப் பெற்றஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் மாறிய மாரிமுத்து அஜித்தின் வாலி, விஜய்யின் உதயா, மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடித்த பரியேறும் பெருமாள் மற்றும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ஜெயிலர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மாரிமுத்து.
இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான இவர் (56) மாரடைப்பால் சென்னையில் காலமானார். அதாவது டப்பிங் முடித்துவிட்டு சாலி கிராமத்தில் உள்ள வீட்டிற்குத் திரும்பியபோது காலை 8.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். இவரின் திடீர் உயிரிழப்பானது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.