டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரவேற்பை பெற்ற ‘2018’ மலையாள திரைப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது போட்டிக்கு அதிகாரபூர்வமாக தேர்வாகியுள்ளது.
96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவிலிருந்து சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவின் போட்டிக்கு மலையாள படமான ‘2018’ அதிகாரபூர்வமாக அனுப்பிவைக்கப்பட உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு (The Film Federation of India) அறிவித்துள்ளது.
95-ஆவது ஆஸ்கர் விருது போட்டிக்கு குஜராத்தி படமான ‘தி செல்லோ ஷோ’ திரைப்படம் இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.