‘அரண்மனை 4’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

by vignesh

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாரர் – காமெடி ஜானரில் சீரிஸாக வெளியாகும் இப்படத்தின் நான்காவது பாகத்துக்கான அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப்படத்தையும் சுந்தர்.சியே இயக்குகிறார். இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி,  மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி படத்துக்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

You may also like

Leave a Comment