ஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா மூலம் புகழடைந்தவர் சந்தானம். தமிழ் சினிமாக்களை ரீ க்ரியேட் செய்து ரகளையான ஷோவாக நடந்தது.அதற்கென்று பலரும் ரசிகர்களாக இருந்தனர். ஏன் இன்றுவரை பழைய லொள்ளு சபா வீடியோக்களை ரசிகர்கள் பகிர்ந்துவருவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. லொள்ளு சபா டீமிலிருந்துதான் யோகிபாபு, மனோகர், சுவாமிநாதன் உள்ளிட்டோர் சினிமாவுக்கு வந்து புகழ் அடைந்திருக்கின்றனர்.
சந்தானம் உலகளாவிய புகழ் அடைந்துவிட்டார். மன்மதன் படத்தின் மூலம் சிம்புதான் சந்தானத்தை சினிமாவில் அறிமுகம் செய்தார். அதன் பிறகு வாய்ப்புகளையும் வாங்கி கொடுத்தார். ஒருகட்டத்தில் தனது திறமையின் துணையோடு நடைபோட்டு கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நகைச்சுவை அடையாளமாக மாறிவிட்டார் சந்தான. எந்தப் பக்கம் திரும்பினாலும் சந்தானத்தின் கவுண்ட்டர்கள் கேட்டுக்கொண்டே இருந்தன.
இந்நிலையில் லொள்ளு சபாவில் சந்தானத்துன் பணியாற்றிய நடிகர் சுவாமிநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.அதில் பேசிய அவர், “மன்மதன் படத்தில் சந்தானத்தை நடிக்க வைத்ததற்காக சிம்புவை கவுண்டமணி திட்டினார். அதாவது நாம அவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு படம் எடுத்தா அதை இவங்க கிண்டல் பண்ணி வீடியோ போடுறாங்க. அவருக்கு எதுக்கு சினிமா வாய்ப்பு கொடுக்குற என கேட்டார்.
: இந்நிலையில் லொள்ளு சபாவில் சந்தானத்துன் பணியாற்றிய நடிகர் சுவாமிநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.அதில் பேசிய அவர், “மன்மதன் படத்தில் சந்தானத்தை நடிக்க வைத்ததற்காக சிம்புவை கவுண்டமணி திட்டினார். அதாவது நாம அவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு படம் எடுத்தா அதை இவங்க கிண்டல் பண்ணி வீடியோ போடுறாங்க. அவருக்கு எதுக்கு சினிமா வாய்ப்பு கொடுக்குற என கேட்டார்.
ஆனால் சிம்புவுக்கு மிகவும் சந்தானத்தை பிடிக்கும். அதேபோல் அவர் மீது நம்பிக்கையும் இருந்தது. எனவே கவுண்டமணி சொன்னதை சிம்பு கேட்கவில்லை. அதுமட்டுமின்றி மன்மதன் படத்தில் கவுண்டமணியின் சில காட்சிகளை நீக்கிவிட்டு சந்தானத்தின் காமெடி காட்சிகளை கட் செய்யாமல் விட்டுவிட்டார்” என சுவாமிநாதன் தெரிவித்திருக்கிறார். அவரது இந்தப் பேட்டியை பலரும் பகிர்ந்துவருகின்றனர்.