கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஹே ராம்’. ஷாருக்கான், ஹேமா மாலினி, ராணி முகர்ஜி, நஸ்ருதின் ஷா, ஓம் பூரி, விக்ரம் கோகலே, நாசர், அப்பாஸ், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
மகாத்மா காந்தியை, கோட்சே கொன்றது குறித்த கதையை அடிப்படையாக கொண்ட இப்படம் வெளியானபோது ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி இப்படம் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.