நடிகர் அஜித்குமார் நடிக்கும் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். ‘விடாமுயற்சி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் த்ரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ஹூமா குரேஷி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதன் படப்பிடிப்பு துபாய் மற்றும் அபுதாபியில் நடக்க இருப்பதாகவும் இயக்குநர் மகிழ் திருமேனி அங்கு லொகேஷன் பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.