‘என் பேரு அர்ஜுன். எனக்கு பயமே கிடையாது’-இறைவன் Review

by vignesh

‘என் பேரு அர்ஜுன். எனக்கு பயமே கிடையாது’ (நாங்க 4 பேரு எங்களுக்கு பயமே கிடையாது என்ற அதே டோன்!) என பின்னணி குரல் ஒலிக்க மாஸாக நடந்து வருகிறார் ஜெயம் ரவி. கட் செய்தால் கதை தொடங்குகிறது. அர்ஜுனும் (ஜெயம் ரவி), ஆண்ட்ரூவும் (நரேன்) உதவி ஆணையர்களாக காவல் துறையில் பணியாற்றி வருகின்றனர்.

பெண்களை கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் பொருட்டு இவர்கள் இருவரின் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்படுகிறது.

இதில் குற்றவாளியை பிடிக்கச் செல்லும்போது விபரீதம் நேரிட, சைக்கோ கில்லர் கைது செய்யப்படுகிறார். அந்த ஒரு சம்பவத்துக்குப் பிறகு காவல் துறைக்கு முழுக்குப் போட்டு ஒதுங்கி வாழ்கிறார் அர்ஜுன். ஆனால் சிறையிலிருந்து தப்பிக்கும் கொலைகாரன், அர்ஜுனை பழிவாங்க துரத்துகிறார்.

பெண்களைத் தேடி தேடி கொடூரமாக கொல்லும் சைக்கோ வில்லன். அவரைத் தேடி கண்டுபிடிக்கும் நாயகன். வேடிக்கை பார்க்கும் போலீஸ். வில்லனுக்கான பின் கதை. இதே டெம்ப்ளேட்டில் உருவாகியிருக்கும் மற்றொரு படம்தான் இயக்குநர் அஹமத்தின் ‘இறைவன்’. சைக்கோ த்ரில்லர் படங்களுக்கான அடிப்படை ஒன்லைன் இதுதான்.

நரேன் சிறிது நேரம் வந்தாலும் கொடுத்ததை சிறப்பாக செய்திருக்கிறார். ராகுல் போஸ் டெரர் லுக்கில் கொடூரத்தை வெளிப்படுத்துகிறார். தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்துக்கு நடிப்பால் உயிர்கொடுப்பதுடன், கடைசி 30 நிமிட ஓட்டத்துக்கு தனது உடல்மொழியால் பெரும் உதவிபுரிகிறார் வினோத் கிஷன். இவர்களைத் தவிர, விஜயலட்சுமி, சார்லி, ஆஷிஸ் வித்யாத்ரி, அழகம் பெருமாள், பக்ஸ் தேவையான பங்களிப்பை செலுத்தியுள்ளனர்.

You may also like

Leave a Comment