‘இறைவன்’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்!!

by vignesh

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இறைவன்’. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இப்படம் வரும் செப்.28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், ‘இறைவன்’ படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அத்துடன் 2 மணி நேரம் 33 நிமிடங்கள் ஓடும் படத்தில் இரண்டு இடங்களில் வரும் கெட்ட வார்த்தைகளை நீக்கவும் தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment