சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல். ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த மாரிமுத்த இறப்பிற்கு பிறகு அண்மையில் வேல ராமமூர்த்தி சில எபிசோட் வந்தார்.
ஆனால் வந்த உடனே அவர் ஜெயிலுக்கு செல்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆதி குணசேகரன் தான் முக்கிய கதாபாத்திரம், அதனை அடிக்கடி காணாமல் போக வைக்கிறார்கள்.
மாரிமுத்துவிற்கு பதில் வேல ராமமூர்த்தி நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வந்தவுடனே அவர் ஒரு பேட்டியில், எனக்கு நிறைய படங்கள் லிஸ்டில் உள்ளது, எனவே சீரியலில் நடிக்க என்னால் கால்ஷீட் ஒதுக்க முடியாது என கூறியிருந்தார்.
இதனால் சில காட்சிகள் அவரை நடிக்க வைத்துவிட்டு அவர் இல்லாமல் சீரியல் எபிசோடுகளை ஓட்டுவார்களா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.