ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அலங்கார விளக்குகள் அமைக்கும் பணியின் போது இந்த விபத்து நடந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் படுகாயம் அடைந்த நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் வேறு யாரும் காயம் அடைந்தார்களா என்பது குறித்து எதுவும் தகவல் இல்லை. இந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடக்குமா நடக்காதா என விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், விபத்தில் படுகாயமடைந்த சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.