ரஜினிகாந்த் மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெரோஃப், சிவராஜ்குமார் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து கடந்த 10ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் 500 கோடியை தாண்டி வசூல் செய்துள்ள நேரத்தில் இதுவரை தயாரிப்பாளருக்கு இப்படம் கொடுத்துள்ள லாபம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, ஜெயிலர் படம் இதுவரை ரூ. 135 கோடி வரை தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துள்ளது என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.