‘ஜப்பான்’ பட டப்பிங் வீடியோ வெளியீடு!!!

by vignesh

நடிகர் கார்த்தியின் 25ஆவது படமாக உருவாகும் ‘ஜப்பான்’ படத்தை ராஜூமுருகன் இயக்குகிறார். இந்தப் படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தபடத்தின்  இறுதிக்கட்டப் படபிடிப்பு கடந்த ஜூன் 24-ம் தேதி முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங்கை நடிகர் கார்த்தி தொடங்கியுள்ளார். இது தொடர்பாக படக்குழு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு ‘ஜப்பான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாக உள்ளது.

You may also like

Leave a Comment