நவரச நாயகன் கார்த்திக் இன்று தனது 63ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து பார்க்கலாம்.
கார்த்திக்nஇயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே கார்த்திக் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக சிறந்த புதுமுக நடிகருக்கான தமிழ்நாடு மாநில அரசை விருதை அசத்தினார் கார்த்திக். 80களில் மட்டுமின்றி 90களிலும் கலக்கினார் கார்த்திக். சுந்தர் சி இயக்கத்தில் அவர் நடித்த மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டாகின.
கார்த்திக்கின் நடிப்பில் இயல்புத்தனமும், துறுதுறுப்பும் எப்போதும் இருக்கும். இதன் காரணமாக அவர் நவரச நாயகன் என்று அழைக்கப்பட்டார். எவ்வளவுக்கு எவ்வளவு அவர் புகழடைந்தாரோ அதேபோல் விமர்சனங்களையும் சந்தித்தார். கார்த்திக் சரியான நேரத்துக்கு ஷூட்டிங் வரமாட்டார் என்பதுதான் அவர் சந்தித்த விமர்சனத்திலேயே பெரிய விமர்சனம். ஆனால் எதற்காக தான் லேட்டாக ஷூட்டிங் செல்வேன் என்பது குறித்து ஒரு மேடையில் ஜாலியாக அவரே சொல்லியிருக்கிறார்.
அதாவது அவரின் முதல் படமான அலைகள் ஓய்வதில்லை படத்தில் அவர் நடித்த முதல் காட்சியே ராதா அவரை பார்த்து ஏன் லேட் என்று கேட்பது போன்றும் அதற்கு கார்த்திக் பதில் சொல்வது போன்றுதானாம். இதனையடுத்து தன் மீது விமர்சனம் வந்தபோதெல்லாம் யோவ் நான் நடிச்ச முதல் படத்தின் முதல் காட்சியே நான் லேட்டாக வருவது போன்றதுதான். அதனால்தான் லேட்டாக வருகிறேன் என ஜாலியாக கலாய்த்துவிடுவாராம். அப்படி ஜாலியான சிறந்த நடிகரான நவரச நாயகன் கார்த்திக்கிற்கு சினிமாலை சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.