16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா நான்கு சுவற்றுக்குள் அடைபட்டிருந்த சினிமாவை வயல்மேடுகள்,கடல் அலைகள், பரந்து விரிந்த மலைகள் என காட்சிக்கு காட்சி அழகுப்படுத்தினார்.
சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா என உணர்வுகள் இழையாடும் காலத்தால் என்றும் அழியாத பல திரைப்படங்களைக் கொடுத்துள்ளார்.
82 வயதான பாரதி ராஜாவுக்கு அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பாரதிராஜா, கவிப்பேரரசு வைரமுத்து சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அந்த வீடியோவை வைரமுத்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
எழுந்து வா இமயமே!@offBharathiraja | #பாரதிராஜா pic.twitter.com/AqqZjN0DTA
— வைரமுத்து (@Vairamuthu) August 1, 2023