தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார், கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக மாமன்னன்’ படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இப்போது, ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா உட்பட சில படங்களில் நடித்துவருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் அனிருத்துடன் திருமணம் என கிசுகிசுக்கப்பட்டது. அதை கீர்த்திக்கு நெருக்கமானவர்கள் மறுத்தனர். இந்நிலையில், தற்போது அதே தகவல் மீண்டும் வைரலாகி வருகிறது.இதுகுறித்து கீர்த்தி விளக்கம் கொடுத்துள்ளார். இதில், என்னுடைய திருமணம் குறித்து பரவும் தகவல் தவறானது. அனிருத் தனக்கு மிகவும் நல்ல நண்பர் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் அனிருத்துடன் திருமணம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.